சி.பி.ஐ. புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சோதனை!
சி.பி.ஐ. அதிகாரிகள் புதுச்சேரி மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், முறைகேடு புகாரையடுத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சென்டாக் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்டாக் அலுவலகத்தின் மீது முறைகேடு புகார்களையடுத்து சென்டாக் அலுவலகத்திலும் பல்வேறு கல்லூரிகளிலும் ஏற்கனவே சோதனைகள் நடைபெற்றன.
சென்டாக் அதிகாரிகள் மற்றும் கல்லூரிகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், கடந்த பல ஆண்டுகளாக முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து 8 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் நேற்றும் இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.