சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு நடிகர் சங்கம் நன்றி!
சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.ஒட்டுமொத்த தமிழ்த் திரைத்துறையினர் சார்பாக தமிழக அரசுக்கு நன்றி என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷால் கூறுகையில், சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது முதல்வர், துணை முதல்வர், செய்தித்துறை அமைச்சருக்கு நன்றி என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110 இன் கீழ் வருவாய் பேரிடர் மேலாண்மை துறைகள் குறித்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
நடிகர் சிவாஜிகணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் .
அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.