பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சிவகாசி அருகே சுக்கிரார்பட்டியில் பேப்பர் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமாயின.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சுக்கிரார்பட்டியில் ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான “ஸ்ரீபதி” என்ற பெயரில் இயங்கும் அட்டை பெட்டி மற்றும் பேப்பர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் பேப்பர் கூழ் தயாரிக்கும் இடத்தில் பழைய கழிவு பேப்பர் இருக்கும் இடத்தில் தீடிரென லேசான தீப்பற்றி புகை வந்தது. அந்தத் தீயை அணைப்பதற்குள், அருகிலுள்ள இடங்களுக்கும் தீ பரவியது.
சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான கழிவு பேப்பர்கள் இந்தத் தீ விபத்தில் தீயில் எரிந்து நாசமாயின. இதில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.விபத்து குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…