சிவகாசி அருகே பேப்பர் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து!

Default Image

பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சிவகாசி அருகே சுக்கிரார்பட்டியில் பேப்பர் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  எரிந்து நாசமாயின.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சுக்கிரார்பட்டியில் ரவிச்சந்திரன் என்பவருக்குச் சொந்தமான “ஸ்ரீபதி” என்ற பெயரில் இயங்கும் அட்டை பெட்டி மற்றும் பேப்பர் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் பேப்பர் கூழ் தயாரிக்கும் இடத்தில் பழைய கழிவு பேப்பர் இருக்கும் இடத்தில் தீடிரென லேசான தீப்பற்றி புகை வந்தது. அந்தத் தீயை அணைப்பதற்குள், அருகிலுள்ள இடங்களுக்கும் தீ பரவியது.

சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான கழிவு பேப்பர்கள் இந்தத் தீ விபத்தில் தீயில் எரிந்து நாசமாயின. இதில் தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.விபத்து குறித்து திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்