சிவகாசியில் 7 வது நாளாக தொடர் போராட்டம் : 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
நம் நாட்டில் நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் பட்டாசு வெடிப்பது அனைவருக்கும் விருப்பமான செயல். அதனை நம்பி பல லட்சம் உழைப்பாளர்கள் தங்கள் வாழ்வாதிரமாக கொண்டுள்ளனர்.
ஆனால் பட்டாசு வெடிப்பதினால் சுற்று சூழல் மாசுபடுகிறது. என பட்டாசு வெடிக்க தடை கோரி பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த சுற்றுசூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கூறி பட்டாசு உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 7வது நாளாகத் தொடர்கிறது. சுமார், 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால். ரூ.90கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் நான்கு லட்சம் தொழிலார்கள் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com