சிவகங்கை அருகே அரசுப் பேருந்து ஊழியர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்து, பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம்!
அரசுப் பேருந்து ஊழியர்களை சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீசார் தாக்கியதைக் கண்டித்து, திருப்பத்தூரில் சக ஊழியர்கள் பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
நேற்றிரவு திருப்பத்தூரிலிருந்து மானாமதுரை சென்ற பேருந்தில் சென்ற பெண் காவலர், நீண்ட வாக்குவாதத்துக்கு பின் டிக்கெட் எடுத்துள்ளார். பின்னர் பணிமனையில் தூங்கிக் கொண்டிருந்த முருகானந்தம், ஓட்டுநர் செந்தில்குமார் ஆகியோரை, மானாமதுரை போலீசார் அழைத்துச் சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.
போக்குவரத்து அதிகாரிகளால் மீட்கப்பட்ட இருவரும், மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதையறிந்த திருப்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், பேருந்துகளை இயக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாக, சிவகங்கை டிஎஸ்பி இளங்கோ உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.