சிலை கடத்தல் வழக்கு:டி.வி.எஸ் குழுமத் தலைவர் வேணுசீனிவாசன் கைது வழக்கு …!உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் ஸ்ரீ ரங்கம் கோவில் சிலை காணாமல் போன வழக்கில் டிவிஎஸ் குழும தலைவரை கைது செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என இன்று விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் நேற்று டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் உட்பட பல கோயில் திருப்பணி குழுக்களில் இருந்துள்ளேன். ஸ்ரீரங்கம் கோயில் சிலை விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது என்று வேணு சீனிவாசன் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரிய நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்தது.6 வாரத்திற்கு டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசனை கைது செய்யக்கூடாது என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனை 6 வாரத்திற்கு கைது செய்ய மாட்டோம் என்று நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
முன்னதாக டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சென்னை கபாலீஸ்வரர் கோவில் அறங்காவல்குழு தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024