சிலை கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதே போல் கொள்கை முடிவு என்ற பெயரில் இதுபோன்று எந்த முடிவும் எடுக்க முடியாது.என்று தீர்ப்பளித்த நிலையில் சிலைக்கடத்தல் சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேல் ஒராண்டுக்கு நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் நேற்றுடன் பொன்மாணிக்கவேல் ஓய்வு பெற இருந்த நிலையில் தான் இந்த தீர்ப்பை வழங்கியது.மேலும் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் உயர்நீதி மன்றம் பிறப்பித்த இந்த உத்தரவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது மக்களிடையே அரசு ஏன் இந்த வேகத்தை மேகதாது விவகாரத்தில் காட்டவில்லை என்று மக்கள் வசைப்படுகின்றனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…