சிற்றுந்து சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இயக்கும் திட்டம் அரசிடம் இல்லை!போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ., பெரியண்ண்ன் கேள்வி நேரத்தின் போது பேசியபோது, புதுக்கோட்டை புறநகர் பகுதிகளில் சிற்றுந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்பினார். சென்னையில் சிற்றுந்து இயக்குவது அரசின் கொள்கை முடிவு என்று தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டம் அரசிடம் இல்லை என்றார். மற்ற மாவட்டங்களில் சிற்றுந்து இயக்க அரசு கொள்கை முடிவு எடுத்தால் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் விளக்கம் தெரிவித்தார்.