உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன் மரணமடைந்தார். இதனையடுத்து, அவரின் உடல் எம்பார்மிங் செய்யப்படுவதற்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. எம்பார்மிங்க்கு பின், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 10 நாள் பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 15 நாட்கள் பரோல் கோரிய சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் 10 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது. சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழ்ந்தார். இந்நிலையில், கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் சிறை விடுப்பு கோரினார் சசிகலா. ஆனால் சிறை நிர்வாகம் 10 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்கியதையடுத்து சசிகலாவுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு 10 மணிக்கு சிறை விடுப்பில் வெளிவருகிறார் சசிகலா.
இதற்கு முன் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…