வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மல்லி தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ‘பாக்சர்’ முரளி (36). குண்டர் சட்டத்தில் கைதான அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
நேற்று முன்தினம் சிறையில் உள்ள கழிவறைக்கு பாக்சர் முரளி சென்றபோது எதிர்கோஷ்டியை சேர்ந்த கைதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
பாக்சர் முரளியின் எதிர்கோஷ்டியான ஆயுள் தண்டணை கைதி ரவுடி நாகேந்திரன் என்பவர் சிறுநீரக கோளாறினால் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை வெளியில் உள்ள கூட்டாளிகள் மூலம் கொலை செய்ய பாக்ர் முரளி சிறையில் இருந்தபடியே சதி திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
இதனை அறிந்த நாகேந்திரன் சிறையில் இருந்த தனது கூட்டாளிகளான கார்த்தி, ஜோயல், சரண்ராஜ், பிரதீப், ரமேஷ் ஆகியோர் மூலம் பாக்சர் முரளியை தீர்த்து கட்டியது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கைதிகள் கார்த்திக், ஜோயல் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
அப்போது கொலைக்கு திட்டம் தீட்டியது எப்படி? என்ற விவரம் தெரியவரும்.
புழல் சிறையில் ரவுடி பாக்சர் முரளியின் கூட்டாளிகளான குண்டர் சட்டத்தில் கைதான மேலும் 3 பேர் உள்ளனர். அவர்களுக்கும் நாகேந்திரனின் கூட்டாளிகளுக்கும் மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டு இருந்த 9 கைதிகள் கடலூர் சிறைக்கும், மேலும் 9 பேர் திருச்சி சிறைக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். சிறையில் மோதல் ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…