சிறுமி பாலியல் வன்கொடுமை:17 பேரையும் இன்று முதல் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை!
சென்னையில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11பேரையும் கைது செய்தது.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் போலீசார் கைதான 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் ஆஜர்படுத்தியது.
இதைதொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா வழக்கில் கைதான 17 பேருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேரையும் இன்று முதல் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.