சிறுமி பாலியல் வன்கொடுமை:தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதி!உயர்நீதிமன்றம்

Default Image
உயர்நீதிமன்றம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.
சாப்ட்வேட் இன்ஜினியர் பாபு (35), போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது மகள் ஹாசினி (7). இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் இன்ஜினியர் தஷ்வந்த் (25) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.இவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது.இந்நிலையில் தஸ்வந்த் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இதில்    தஷ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து இவர் மீது  தொடர்ந்த வழக்கில்  உயர்நீதிமன்றம்  தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்