சிறுமியை கடத்த முயன்ற இளைஞருக்கு தர்ம அடி!
சிறுமியை கடத்த முயன்ற இளைஞரை, திருப்பூரில் பொதுமக்கள் கட்டிவைத்து அடித்து உதைத்தனர்.
சின்னாண்டிபாளையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் பேச்சுக்கொடுத்த இளைஞர் ஒருவர் அவரை தூக்கிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த சிறுமியின் தாயார், மகளை அடையாளம் தெரியாத நபர் தூக்கிச்செல்ல முயல்வதை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து, தப்பிஓட முயற்சித்த அந்த நபரை பிடித்த பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு விசாரித்ததில், அவர் திருப்பூர் கேவிஆர் நகரை சேர்ந்த சிவா என்பது தெரியவந்தது. அப்பகுதிக்கு அவர் வந்ததற்கான காரணம், சிறுமியை ஏன் தூக்கினார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.