நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர் அமித் ஷா கூட்டம் முடிந்தவுடன் பேச ஆரம்பித்தார்.அவர் ஹிந்தியில் பேசினார்.இதை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
இதில் அமித் ஷா சொட்டு நீர் பாசனத்திற்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக பேசினார்.இதை மொழி பெயர்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சொட்டு நீருக்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்று தவறாக தெரிவித்துவிட்டர்.இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…