சிம்பு கேள்வியா?அதுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!நழுவிய அன்புமணி

Default Image

சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸுடன் மூன்றாவது முறையாக முன்னணி நடிகர் விஜய் நடிக்கிறார்.விஜய் பிறந்த 21 ஆம் தேதி படத்தின் முதல் தோற்றப் படம்(FIRST LOOK) வெளியிடப்பட்டது. சர்கார் படத்தின் முதல் தோற்றத்தில் (FIRST LOOK), விஜய் புகைப்பிடிக்கும் காட்சி உள்ளது.

இந்த படத்தின் முதல் தோற்றத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிக்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனால் பொதுச்சுகாதாரத்துறை இயக்குனர் முருகதாஸ்,நடிகர் விஜய்,படத்தின் தயாரிப்பாளரான சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ஆகியோருக்கு புகை பிடிக்கும் காட்சி இடம்பெற்றதால் நோட்டீஸ் அனுப்பியது.மேலும் அந்த காட்சியை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் கோரிக்கை விடுத்தது.

பின்னர் சர்காரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்.

பின்னர் அடையாறு புற்று நோய் மருத்துவ மையம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.பின்னர் சர்கார் திரைப்பட வழக்கில் நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் நோட்டீஸ் அனுப்பியது.

விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிம்புவின் தந்தை விஜய.டி.ராஜேந்தர் பேசினார்.இவரை தொடர்ந்து இவரது மகன் சிம்பு நேற்று கூறுகையில்,  பாபா படம் முதல் சர்கார் படம் வரை புகைபிடித்தல் பற்றிய கருத்தையும் , தொடர்ந்து சினிமாவிற்கு தொந்த்தரவும் தரும் ராமதாசுக்கு ஒரு சவால் விடுத்தார். அது என்ன என்றால் தைரியம் இருந்தால் வாருங்கள் நாம் நேருக்கு நேர் பேசுவோம் என்று அழைத்தார் .

இந்நிலையில் பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று  கூறுகையில், நடிகர் விஜய் புற்று நோயால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புகை பிடிக்க வேண்டாம் என்று கூறினேன் என்று விளக்கம் அளித்தார்.நடிகர் விஜய் புற்று நோயால் பாதிக்கப்படக்கூடாது என்பதாலேயே தான் எதிர்ப்ப தெரிவித்த காரணமும் இது தான் என்றும் கூறினார்.

மேலும்  நடிகர் சங்கம் ஒரு கூட்டத்தை கூட்டட்டும், ஒட்டுமொத்த நடிகர்கள் இயக்குநர்கள் வரட்டும், நான் அங்கு புகையிலை குறித்த தீங்குகளை விளக்குகிறேன். ஆனால் சிம்புவின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கு இல்லை என்று பா.ம.க இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k