குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்காக ஆஜராக சிபிஐ சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியது.இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு விசாரணைக்காக அமைச்சர் வந்து ஆஜராகியதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய புள்ளிகளை குடைந்து எடுத்து கொண்டிருக்கும் குட்கா முறைகேடு வழக்கில் இதுவரை 6 பேரை கைது செய்துள்ளது சிபிஐ.இந்நிலையில் இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை செய்து நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது உதவியாளர் சரவணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா உள்ளிட்டோருக்கு நேற்று முன்தினம் சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனுக்கு அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளர் சரவணன் இதற்கு முன்பே 2 முறை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜரானதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்பாக அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை தொடர்ந்து சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ரமணாவும் விசாரணைக்கு ஆஜராகி சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர் என்ற தகவகள் தெரிவிக்கின்றது.