சின்னம்மா காலில் குழந்தைபோல விழுந்தவர் எடப்பாடி பழனிசாமி ….!பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி…!டி.டி.வி.தினகரன் அதிரடி

Default Image

எடப்பாடி பழனிசாமி குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து சசிகலா காலில் விழுந்து வணங்கினார் என்று டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம்  முதல்வர் பதவியை இழந்த நிலையில்  2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
Image result for பன்னீர்செல்வம் தர்மயுத்தம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம்  அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன்  ஒன்றாக இணைந்த பின்  சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென  எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை  வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை  பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும்  பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
Related image
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் டி.டி.வி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்,எடப்பாடி பழனிசாமி குழந்தை மண்டியிட்டு வருவது போல் வந்து சசிகலா காலில் விழுந்து வணங்கினார்.பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி இன்று என்னை குட்டி எதிரி என்கிறார். நான் அம்மாவின் குட்டிதான். அம்மா 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி பாய்வேன். கழுவிய கை காயும் முன் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வார் என நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் யார் என்று இந்திய நாடே பார்க்கும் அளவுக்கு செய்ததற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க.வுக்கு காங்கிரசுடன் கூட்டணி இருக்கிறதோ இல்லையோ எடப்பாடியுடன் கூட்டணி இருப்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொல்லும் நபர்களுக்கு ஒப்பந்தப்பணி கொடுக்கப்படுகிறது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்