ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. மூன்றாக பிரிந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.
பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தனது மனசாட்சி கேள்வி எழுப்பியதால்தான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததாகவும், அவர் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் பரபரப்பு தகவல்களைதெரிவித்தார்.
பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. மூன்றாக பிரிந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. அம்மா, மகள், பாட்டி என மூன்றாக பிரிந்துள்ளது என்று கூறியுள்ளார்
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…