ஷீரடி சாய்பாபாவின் கோயில் காலவரையின்றி மூடப்படுகிறதா..?கோவில் நிர்வாகம் விளக்கம்
- ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என வெளியான தகவல்
- கோயில் நிர்வாகம் விளக்கம்
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்து வருகை தருகின்றனர். சாய்பாபவின் உபதேசங்களை இன்றும் அவருடைய பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே சாய்பாபா பிறந்த பகுதி ஷீரடி இல்லை அவர் பர்பானி பகுதியில் தான் பிறந்தார் என்று அன்மையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய இருந்தார் அவருடைய இந்த கருத்தால் கடும் சர்ச்சை ஏற்பட்டது.இதனை கண்டிக்கும் விதமாக நாளை முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி மூடப்படும் என்கிற தகவல் வெளிய வந்தது இதனால் பக்தர்கள் குழ்ப்பத்தில் இருந்தனர் இந்த குழப்பத்தினை கோயில் நிர்வாகம் போக்கி உள்ளது.கோவில் நிர்வாகம் இது தொடர்பாக தெரிவிக்கையில் நாளை முதல் காலவரையின்றி ஷிரடி கோவில் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி ,மற்றும் கோவில் எப்பொழுதும் போல் திறக்கப்படும் வழிபாடுகள் அனைத்தும் நடைபெறும் என்று நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.