#சாத்தன்குளம்# 5 போலீசார் கைதா??!!-சிபிசிஐடி கிடுக்குப்பிடி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசாரை கைது செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கி உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த விசாரணையின் அடிப்படையில் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் காவலர் முத்துராஜ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் தப்பி தலைமறைவானதை அடுத்து தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டார்.பின் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவருடைய செல்போன் சிக்னலை வைத்து போலீசார் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இதற்கிடையே, விளாத்திகுளம் அருகே தனது சொந்த ஊரானள பூசனூர் பகுதியில் முத்துராஜ் சுற்றித்திரிவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் முத்துராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட முத்துராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், காவலர் முத்துராஜ் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராஜ்ஜை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த திங்கள் கிழமை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி ஆஜார் படுத்தினர்
நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்ட காவலர் முத்துராஜை ஜூன் 17 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் நேற்று சிபிசிஐடி கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்ற நிலையில் இவ்விசாரணையைத் தொடர்ந்து மேலும் 5 போலீசாரும் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது சாத்தான்குளம் வழக்கில் ஏற்கனவே தலைமறைவாகிய காவலர் முத்துராஜ் உட்பட 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்