கருணாநிதி மறைவை அடுத்து அவரை நல்லடக்கம் செய்யும் ஏற்பாடுகள் தயாராகிவரும் வேலையில் அவரது உடல் வைக்கப்படும் சந்தனப்பெட்டியின் மீது எழுதப்பட்டுள்ள வாசகத்துடன் படம் வெளியாகி உள்ளது.
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர் கருணாநிதி. தனது கடுமையான உழைப்பால் திருவாரூர் குக்கிராமத்தில் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கருணாநிதி தமிழகம் ஆளும் முதல்வராக உயர்ந்ததன் பின்னால் அவரது கடுமையான உழைப்பை யாரும் மறுக்க முடியாது.
திமுக தலைவரின் இறுதி நிகழ்வுகள் வேகவேகமாக நடந்து வருகிறது. அவர் உடல் வைக்கப்பட சந்தனப்பெட்டி தயாராகிவிட்டது. அதன்மீது பொருத்தமான வாசகத்தை பதித்துள்ளனர். அதன் மீது
‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி- திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஆகஸ்டு 07- 2018என எழுதப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…