சாதித்த தலைவனுக்கு சந்தனப்பெட்டியில் இடம் பெற்ற வாசகம்..!!

Default Image

கருணாநிதி மறைவை அடுத்து அவரை நல்லடக்கம் செய்யும் ஏற்பாடுகள் தயாராகிவரும் வேலையில் அவரது உடல் வைக்கப்படும் சந்தனப்பெட்டியின் மீது எழுதப்பட்டுள்ள வாசகத்துடன் படம் வெளியாகி உள்ளது.

ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என்று திமுகவினரால் அழைக்கப்பட்டவர் கருணாநிதி. தனது கடுமையான உழைப்பால் திருவாரூர் குக்கிராமத்தில் பின்புலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த கருணாநிதி தமிழகம் ஆளும் முதல்வராக உயர்ந்ததன் பின்னால் அவரது கடுமையான உழைப்பை யாரும் மறுக்க முடியாது.
திமுக தலைவரின் இறுதி நிகழ்வுகள் வேகவேகமாக நடந்து வருகிறது. அவர் உடல் வைக்கப்பட சந்தனப்பெட்டி தயாராகிவிட்டது. அதன்மீது பொருத்தமான வாசகத்தை பதித்துள்ளனர். அதன் மீது
‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என்ற வாசகம் ஒரு புறமும், மறுபுறம் கலைஞர். மு.கருணாநிதி- திமுக தலைவர் ஜூன் 03- 1924- ஆகஸ்டு 07- 2018என எழுதப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்