சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் தற்கொலை….
கன்னியாகுமரி ரட்சகர் தெருவை சேர்ந்தவர் ரிச்சர்ட் (வயது 25), இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிச்சர்ட் சக மீனவர்களுடன் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையின் கயிறு கை விரலில் சுற்றி கையில் ஒரு விரல் துண்டானது. இதனால் அவர் வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக சொந்த ஊருக்கு கன்னியாகுமரிக்கு வந்தார். இங்கு வீட்டில் இருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த. இ வர் சொந்த ஊரிலும் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.இதனால் மனமுடைந்த இவர் நேற்று காலையில் ரிச்சர்ட் வீட்டில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக விசாரணையில் ரிச்சர்ட் அதிகளவில் மாத்திரை தின்று தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

DINASUVADU