” சரணடைகிறார் காவல் ஆணையர் ஜார்ஜ் ” கலக்கத்தில் தமிழக காவல்துறை..!!
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலத்தை ஆறுமுகசாமி பதிவு செய்துள்ளார். இதில் சிலரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அவ்வபோது குறுக்கு விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக வந்தார்.
ஆனால் அவருக்கு இன்று விசாரணை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் திரும்பி சென்றார். நேற்று சிபிஐ சோதனையின் போது, ஜார்ஜ் அமெரிக்க சென்றிருந்ததாக தகவல் வந்த நிலையில், இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரானது எப்படி என சந்தேகம் எழுந்துள்ளது. வேறு ஒரு தேதியில் ஆஜராகும்படி ஆணையம் அனுப்பியிருந்த கடிதத்தை ஜார்ஜ் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குட்கா விவகாரம் தொடர்பாக நேற்று 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஆகியோர் விடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்த சூழலில் தமிழக காவல்துறை கதிகலங்கி நிற்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
DINASUVADU