சயான், மனோஜ் பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சினை..! நீதிபதி சரமாரி கேள்வி..!!!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை வைத்த மேத்யூ மற்றும் சயன் ஆகியோரை விசாரணை செய்ய தமிழகத்தில் இருந்து துணை ஆணையர்கள் தலைமையிலான இரண்டு தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர்.
இருவரும் துவாரகா பகுதியில் சயன், மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து இன்று அதிகாலை சென்னை கொண்டு வரப்பட்டனர்.இந்நிலையில் மாலையில் நீதிபதியிடம் ஆஜர் படுத்திய நிலையில் 2 மணிநேரமாக விசாரணை நடத்திய நிலையில் இது குறித்து விசாரித்த நீதிபதி கோடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோர் மீது புகாரளித்தவர்களிடம் விசாரணை நடத்தினீர்களா? சயான், மனோஜ் பேட்டியால் போலீஸ் கூறுவதுபோல் எங்கு கலவரம் ஏற்பட்டது? அரசுக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்று சரமாரியாக நீதிபதி சரிதா கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் இருவரையும் சிறையில் அடைக்க போலீசார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துவிட்டார்.