சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்!ரஜினிகாந்த்
நலம் விசாரித்த பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியது:
தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் .சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஜெயலலிதா அடைக்கி வைத்திருந்தார்.சமூக விரோதிகளை அடக்க ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளை எரித்தது பொதுமக்கள் இல்லை, சமூக விரோதிகளே என்று ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் நிர்வாகத்திற்கு வரவே கூடாது.
போராட்டம் நடத்தும் போது பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகின்றனர் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சமூகவிரோதிகள் உள்ளே வந்ததை கண்டுபிடிக்க தவறியது உளவுத்துறையின் தவறு
போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் சமூகவிரோதிகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்ந்து போராட்டம் நடைபெற்றால் தமிழகத்தில் எப்படி தொழில்துறை வளர்ச்சி அடையும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் போல் இனி நிகழக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி என்றும் அறிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கினார்.