சமூக வலைத்தளங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பதிவிடப்படும் பதிவுகள் 3 மணி நேரத்தில் நீக்கப்படும்…
- சமூக வலைத்தளங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பதிவிடப்படும் பதிவுகள் 3 மணி நேரத்தில் நீக்கப்படும்.
- சமூக வளைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்ததால் நெருங்கி வருகிற நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக வளைத்தள நிறுவனங்கள் மக்களவை தேர்தலையொட்டி விதிகளை மீறி பதிவிடப்படும் தகவல்களை 3 மணி நேரத்திற்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் ஆணையத்திடம் உறுதியளித்துள்ளனர்.
மேலும், விதிமுறைகளை மீறி தகவல்கள், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகளை தேர்தல் நடத்தும் நாளில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்னதாக பதிவிடப்பட்டால், அதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் தடை சான்றிதழ் கிடைத்த 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சமூக வளைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.