முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சட்டரீதியாக தீர்க்கக் கூடிய பிரச்னை என்று தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சமூக வலைத்தளங்களில் பேசக்கூடிய பிரச்னை அல்ல என்றும், சட்டரீதியாக தீர்க்கக் கூடிய பிரச்னை என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடி தமிழகம் வந்த போது, தமிழக மக்களின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் கூறியதாகவும், அதையே மனுவாகக் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
மத்திய அரசு மேலும் காலதாமதம் செய்யும் என்பது கற்பனையான கேள்வி என்று குறிப்பிட்ட முதலமைச்சர், மே 3ஆம் தேதிக்குள் தாங்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…