நேற்று திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக பெண் தொண்டர் ஒருவரின் இடுப்பு கிள்ளப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்தது. குறிப்பாக சென்னையில் சாலை மற்றும் ரயில் மறியல் போரட்டங்கள் நடைபெற்றது.
அந்நிலையில்,கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவர் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். சென்னையில் நடந்த மறியல் போரட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது பிரபாகரன் என்ற நிர்வாகி தனது இடுப்பை கிள்ளிவிட்டதாக அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நகர செயலாளரிடம் புகார் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை.
எனவே, செயல் தலைவர் ஸ்டாலினின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன் என ஜெயமணி கூறினார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறிய பின்பு ஜெயமணி சமாதானம் அடைந்தார். இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…