சபாநாயகருடன் முதல்வர் தீடீர் சந்திப்பு..!!
சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர்.
சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கேரளத்திற்கு வெள்ள நிவாரண உதவியாக அதிமுக எம்எல்ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வரை 80 எம்எல்ஏ.க்கள் அதற்கான காசோலையை கொடுத்துவிட்டதாகவும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், கொறடா, சபாநாயகர் உள்ளிட்டோர் இன்னும் தரவேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே அந்த தொகையை எப்போது வழங்குவது என்பது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தலைவர் என்ற அடிப்படையில் சபாநாயகருடன் நிறைவு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
DINASUVADU