சபரிமலை செல்லும் பக்தர்களை குறிவைக்கும் கயவர்கள்..!சாமிகளே ஜாக்கிரதை.!!

Default Image
கார்த்திகை,மார்கழி மாதம் சபரிமலை சீசன் ஆகும் இந்த மாதத்தில் ஐயப்ப பகதர்கள் சபரிமலை செல்வார்கள்.அப்படி நெடுதூரத்திலுருந்து வரும் சாமிகள் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் குளித்து நீராடி விட்டு செல்வது வழக்கம் அதன் படி இந்த ஆண்டும் வரும் ஐயப்ப பக்தர்களை குறிவைக்கிறது ஏமாற்றும் கும்பல்.
இதில் பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்  சமூக வலைதளங்களில் இது குறித்து வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.இதன் அடிப்படையில் போலீசார் மர்ம கும்பலை கைது செய்தனர்.இந்த கும்பலானது கன்னியகுமாரிக்கு சுற்றுலா வந்த ஐயப்ப பக்தர் ஒருவர் கடை ஒன்றில் வாங்கி செல்போன் சார்ஜ் செய்ய பயன்படுத்தக்கூடிய பவர் பேங்க் ஒன்றை வாங்கியுள்ளது. இந்த பவர் பேங்க் போலியானது என்பது கன்னியாகுமரியை விட்டு சென்ற பிறகுதான் அவருக்கு தெரிய வந்தது.இதில் என்ன கொடுமை என்றால்  பவர் பேங்க் என்ற பெயரில் அதன் உள்ளே களிமண்ணை அடைத்து வைத்து அதில் சிறிய அளவிலான பேட்டரி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பின் இதே போல் வேறு யாரும் ஏமாறக் கூடாது என்று நினைத்து ஐயப்ப பக்தர் தான் வாங்கிய பவர் பேங்க்  உடைத்து அதில் உள்ளே இருந்த களிமண்ணை காட்டி வாட்ஸ் அப் மற்றும் பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினார்.அவருடைய இந்த காட்சிகள் சமூக ஆர்வலர்கள் மூலம் போலீசாரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்த நுதன கொள்ளையை தொடர்ந்து சுற்றுலா தலங்களில் நடமாடுகின்ற வியாபாரிகளை ரகசியமாக கண்காணிக்க போலீசார் திட்டமிட்டு தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் வியாபாரம் செய்துக்கொண்டிருந்த சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக நடமாடிய வியாபாரிகள் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் இருந்த பவர் பேங்க் அனைத்தும் போலியானவை என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து இந்த நூதன கயவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த சித்திக் மற்றும் பெங்களூரை சேர்ந்த சபீப் உல்லா ஆகிய இந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து ரொக்க பணம், மெம்மரி கார்டுகள் மற்றும் நூற்றுக்கணக்கான போலி பவர் பேங்க் களை பறிமுதல் செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்