சட்ட விரோதமாக இயங்கி வந்த 5 சாய ஆலைகள் சேலம் அருகே  அகற்றம்!

Default Image

வீட்டிற்காண மின் இணைப்பு பெற்று சட்ட விரோதமாக இயங்கி வந்த 5 சாய ஆலைகள் சேலம் அருகே  இடித்து அகற்றப்பட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அதிரடியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

சாயப்பட்டறைகளின் ரசாயண கழிவுகள்  சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கொட்டநத்தான் ஏரியில் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. இதைக் கண்டித்தும், சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டவிரோத சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வாரம் சேலம் சிலோன் காலணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கிவந்த 10 சாய ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன.

 

செவ்வாய் கிழமை ஒரே நாளில் அதன் தொடர்ச்சியாக 5 சட்டவிரோத சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. எருமபாளையம் பகுதியில் இயங்கி வந்த வசந்த குமார் என்பவருக்கு சொந்தமான எஸ்.பி கலர்ஸ், சரவணன் என்பவருக்கு சொந்தமான சரவணா டையிங், வித்யா சேகரன் என்பவருக்கு சொந்தமான குமார் சில்க்ஸ் டையிங் மற்றும் மாரியப்பன் டையிங் ஆகிய சாய ஆலைகளும் லைன் மேடு பகுதியில் இயங்கி வந்த சுரேஷ் டையிங் ஆலையும் அடுத்தடுத்து இடித்து அகற்றப்பட்டது.

திருமணிமுத்தாறு மற்றும் நீர் நிலைகளை இந்த நடவடிக்கையின் மூலம்  சாயக்கழிவு கலப்பில் இருந்து காப்பாற்ற முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

அதிக அளவில் மின்சாரத்தை இந்த சட்டவிரோத சாய ஆலைகளுக்கு வீட்டிற்கான மின் இணைப்பைப் பெற்றுக் கொண்டு  பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மின் கணக்கீட்டுப் பணிக்குச் செல்லும் ஊழியர்கள், அதிக அளவிலான மின்சாரம் உபயோகிக்கப்பட்டு இருந்தால், அந்த வீடுகளில் என்ன உபயோகத்துக்கு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்று விசாரித்தாலே அங்கு செயல்படும் சட்டவிரோத சாயஆலைகளை அடையாளம் காண இயலும் என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், அதே நேரத்தில் மின்வாரிய அதிகாரிகள் சட்டவிரோத சாய ஆலைகள் குறித்து கண்காணித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் முற்றிலுமாக சட்டவிரோத சாய ஆலைகளை ஒழிக்க முடியும் என்கின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்