விசுவ இந்து பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில் விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, உத்திர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவருகிற ரத யாத்திரையானது இன்று நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு வந்து சேர்ந்தது.
மக்களை பிளவுபடுத்துகிற ரத யாத்திரைக்கு அரசியல் கட்சிகளின் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே சமயம், இந்த ரத யாத்திரை எவ்வித சலனமும் இன்றி தொடர்ந்து செல்லும் விதத்தில் நெல்லையில் 144 தடை உத்தரவினை விதித்து, தான் பாஜகவின் ஊதுகுழல் அரசுதான் என்பதனை மீளவும் ஓர் முறை மெய்ப்பித்துள்ளது எடப்பாடி பழனிசாமி – ஓபிஎஸ் அரசு.
இந்நிலையில், சட்டப்பேரவையில், தமிழகத்தில் ரத யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின். அப்போது, ரத யாத்திரையை ஆதரிக்கும் விதமாக முதல்வர் பேசியதால் கடும் கோபமடைந்த நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவையின் மைய மண்டபத்திற்கு முன் தனியாளாய் விரைந்து சபாநாயகரை நோக்கி ஆவேசமாக முழக்கமிட்டு தர்ணாவில் ஈடுபட்டு சட்டப்பேரவையை கலங்கடித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…