திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாது என்பதை கண்டிக்கும் வகையில், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.
பேரவையில் முதலமைச்சர் அறிவித்த குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து பேச சபாநாயகர் அனுமதித்தார். அமைச்சர்கள் நன்றி தெரிவிக்க அனுமதி வழங்கினால், தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் அனுமதிக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கோரினார்.
ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது என்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக வெளிநடப்பு செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல காங்கிரஸ் உறுப்பினர்களும் முஸ்லீம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து பேரவையில், திமுக வெளிநடப்பை விமர்சனம் செய்யும் வகையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் 1996, 1999, 2006, 2007, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை என பட்டியலிட்டார். யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் நீர் இருந்தால்தான் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை ஜூன் மாதத்தில் முன்னதாகவே தண்ணீர் திறந்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…