சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அதிரடி..!
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி, ஆடிட்டர் குருமூர்த்திக்கு, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஆடிட்டர் குருமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தவறான தகவல்கள் இருப்பதாக சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம், அவர் மறு குறுக்கு விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர் பாண்டியன், குருமூர்த்தி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ஜெயலலிதா மரணம் பற்றி பொதுவெளியில் குருமூர்த்தி கருத்து கூறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறினார். ஆனால், விசாரணை ஆணையம் தேவை என குருமூர்த்தி தான் முதலில் சொன்னதாக, ராஜா செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.