சசிகலாவின் கணவர் நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானதை அடுத்து, பெங்களூரு சிறையில் இருக்கும் அவரது மனைவி சசிகலாவுக்கு பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ம.நடராஜன் சற்றுமுன் காலமானார். இன்று அதிகாலை 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன,. இந்த நிலையில். நடராஜனின் உடல் எமாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நடராஜனின் உடல் காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன்பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனனர்.
இந்தநிலையில் நடராஜன் காலமானதை அடுத்து சசிகலாவுக்கு உடனடியாக பரோல் உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில் சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…