சசிகலாவின் சொத்துக்கள் : வருமானவரித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு

Default Image

சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகள் அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இன்று வருமான வரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ‘ரூ.1430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் பினாமிகள் வெளியாட்களாக இருப்பதால் அவர்கள் யார் என கண்டறிவது கடினம்’  எனவும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்