அப்போது, எம்கேபி நகர் காவல் நிலைய எஸ்ஐ-க்கள் ராஜா, ஜெகதீஸ் மற்றும் தலைமை காவலர் வேலாயுதம் ஆகியோர் அந்த பகுதியில் மப்டியில் ரோந்துப் பணியில் இருந்துள்ளனர். சகோதரர்களின் சண்டையை பார்த்த உடன் அதை விலக்கி விட முயன்றனர். மப்டியில் இருந்ததால், போலீஸ் என தெரியாமல், அவர்கள் “உங்கள் வேலையை பார்த்து செல்லுங்கள்” என தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து வாய்தக ராறு முற்றி செல்வம், சத்தியராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போலீஸ் எஸ்ஐக்கள் மற்றும் தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர்தான் உதை வாங்கியது போலீஸார் என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காயமடைந்த போலீஸார் ராஜா, ஜெகதீஸ், வேலாயுதம் ஆகியோரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சகோதரர்களான செல்வம், சத்தியராஜ் உட்பட 13 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த செல்வம் மற்றும் சத்தியராஜ் உறவினர்கள் போலீஸாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து போராட்டக்காரர்களிடம் சமாதானம் பேசினர். அதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.