கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினருடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம்!

Default Image

கோவை மாவட்டத்தில் அரசு  வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டது. இதற்கிடையே, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் லஞ்சம் பெருவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து,அரசு உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப தடை விதித்தது.

இந்நிலையில், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பலாம் என்று அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை உதவி பேராசிரியரும், பல்கலைக்கழக எஸ்.சி., எஸ்.டி. பேராசிரியர்கள் சங்க தலைவருமான சரவணகுமார், நேற்று மாலை பதிவாளர் அறைக்கு சென்றார்.

பின்னர் அரசு, உதவி பேராசிரியர் பணியிடத்தில் ஊழல் நடக்கக்கூடாது என்றும், பணியிடங்களை நேர்மையாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதுபோன்று பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை பணிமாறுதல் வழங்கப்படுகிறது.

அதில் சிலரை விரும்பாத இடங்களுக்கு மாற்றப்படுவதால், அவர்களின் விருப்பத்தை கேட்டறிந்து மாறுதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு பதிவாளர் அளித்த பதில் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் அவர் மற்ற உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து பதிவாளர் அறை முன்பு அமர்ந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை தொடர்ந்து பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் இங்கு வந்து எங்களது கோரிக்கையை ஏற்றால்தான், போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள்.

தற்போது துணைவேந்தர் இங்கு இல்லை, அவர் வெளியூரில் இருக்கிறார் என்று அவர்கள் கூறினாலும், துணைவேந்தர் வரும்வரை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி  இரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்