கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published by
Dinasuvadu desk

கோவை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தடை:

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100 பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது நடைபெற்று வருகிறது. அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரது படம் போட்டு பல பெரிய பெரிய பேனர்களும்,தோரண வாயில்களும் மக்கள் அனுதினமும் பயணிக்கும் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கபட்டிருந்தன.இந்நிலையில் உயர் நீதிமன்றமானது உயிரோடு இருப்பவர்களின் படங்களை போட்டு பேனர் வைப்பதற்கு தடை விதித்தது.

who killed raghu:

இதனை தொடர்ந்து முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்களோடு இணைந்து இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட பேனர்களை வைக்க ஆரம்பித்தனர். இப்படி மக்கள் அணிதினமும் பயன்படுத்தும் சாலை மற்றும் நடைப்பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பேனர் மற்றும் தோரண வாயில் இடையுறால் கோவையை சேர்ந்த வாலிபர் ரகு என்பவர் சாலை விபத்தில் கடந்த 24.11.17 அன்று உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கண்டு மிகவும் கோவமடைந்தனர்,பின்பு அரசியல் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தங்களை மாறி மாறி குற்றம் சாட்டிகொண்டிருந்தனர்.இதனால் மக்கள் “who killed raghu?”(ரகுவை கொன்றது யார்?) என்று அந்த அலங்கார தோரண வாயில் வைக்கபட்டிருந்த இடத்திலும் எழுதி இருந்தனர் அடுத்த கணமே அதனையும் அழித்தது கோவை மாநகராட்சி.

போலீஸ் பாதுகாப்பு:

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவானது கோவையில் நடைபெற உள்ளதால் அங்கு வைக்கபட்டுள்ள பேனர்களுக்கும்,அலங்கார தோரண வாயில்களுக்கும் ஷிப்ட் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. டாஸ்மார்க் எதிரான போராட்டங்களை ஓடுக்க பெண் மற்றும் ஆண் காவலர்களை பணிக்கு அமர்த்தியதைத் தொடர்ந்து தற்போது பேனர்களை காப்பாற்ற போர்கால நடவடிக்கை எடுத்து வருகிறது நமது அரசு .

என்றும் மக்கள் பணியில் அதிமுக அரசு…..

விபத்தில் மரணமடைந்த வாலிபர் ரகு

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

11 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

12 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

13 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

13 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

14 hours ago