கோவை அருகே சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதலால் மக்கள் பீதி!
சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதல் காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறையை அடுத்துள்ள சின்கோனா தேயிலை தோட்டத்தில் கடந்த வாரம் சிறுத்தைப்புலி தாக்கியதில் படுகாயம் அடைந்த 11 வயது மாணவி மற்றும் சந்திரமதி ஆகியோர் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதை தொடர்ந்து இப்பகுதியில் சிறுத்தைப்புலியின் தொடர் தாக்குதலை தடுக்க வலியுறுத்தி நேற்று சின்கோனா தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், சின்கோனா முதல் பிரிவு, பெரியகல்லார் ஆகிய பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் வைக்கப்பட்டன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.