கோவை:ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு வனத்துறை அனுமதி மறுப்பு..!!
கோவை மாவட்டத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
இது தொடர்பாக மேட்டுப்பாளையம் வனச்சரகர் விடுத்துள்ள அறிவிப்பில், மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வனப்பரப்பிற்கு மேலோ அல்லது யானைகளின் வழித்தடத்தில் தாழ்வாகவோ ஹெலிகாப்டர்கள் பறக்கும்போது உண்டாகும் அதீத சப்தத்தால் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் பயந்து கிராமங்களுக்குள் புகுந்துவிடும் ஆபத்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே வனப்பரப்பிற்கு மேலோ அல்லது அதன் அருகாமையிலோ ஹெலிகாப்டர்களை இயக்கக்கூடாது என்று வனச்சரகர் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்