60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
ஜெயின் என்ற சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஓர் அறையை தஸ்தகீர் என்பவர் 2 நாட்களுக்கு வாடகை எடுத்து, நண்பர்கள் நான்கு பேருடன் திங்களன்று இரவு தங்கியுள்ளனர். பின்னர், நள்ளிரவே அனைவரும் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தஸ்தகீரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த குடியிருப்பின் உரிமையாளர் வெங்கடேஷ், அந்த அறைக்கு சென்று பார்த்ததில் ஒரு பையில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.
இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…