கோவையில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

Default Image

60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோவை பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து  கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜெயின் என்ற சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் ஓர் அறையை தஸ்தகீர் என்பவர் 2 நாட்களுக்கு வாடகை எடுத்து, நண்பர்கள் நான்கு பேருடன் திங்களன்று இரவு தங்கியுள்ளனர். பின்னர், நள்ளிரவே அனைவரும் அங்கிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து தஸ்தகீரின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த குடியிருப்பின் உரிமையாளர் வெங்கடேஷ், அந்த அறைக்கு சென்று பார்த்ததில் ஒரு பையில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.

இதையடுத்து, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அங்கு வந்த காவல்துறையினர் பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்