கோவையில் பாஜகவினர் காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு !
மர்ம நபர்கள் கோவையில் பாஜக பிரமுகரின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா காரில் பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காமிராவை கைப்பற்றி சிங்காநல்லூர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில், கோவை செல்வபுரம் பகுதியில் உமாபதி என்பவரின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி பாஜக மாவட்ட அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.