வங்கிக் கணக்கில் கோவை குனியமுத்தூரில் நான்கரை லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ள சம்பவத்தில் நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார்.
குனியமுத்தூரைச் சேர்ந்த உசேன் பீவி என்பவர், கணவரின் ஓய்வூதியத் தொகையை பெறுவதற்காக வெரைட்டி ஹால் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு சென்றார். ஆனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த நான்கரை லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தங்கள் வங்கிக் கணக்கில் நஜீமாபேகம் என்பவர் ஏடிஎம். அட்டை பெற்றதாகக் கூறும் அதிகாரிகள், வேறு எந்த தகவலையும் கூறாமல் அலைக்கழிப்பதாக உசேன் பீவி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருவரது வங்கிக் கணக்கிற்கு மற்றொருவர் எப்படி ஏ.டி.எம். வாங்க முடியும் என்ற கேள்வி எழுவதால் இந்த மோசடியில் வங்கிக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…