கோவையில் நாட்டு வெடிகுண்டில் சிக்கி வனவிலங்கு பலி..!

Default Image

நாட்டு வெடிகுண்டில் சிக்கி முகம் சிதறிப்போன பசுமாடும், காட்டு யானையும் உயிரிழப்பு, காட்டுப்பன்றியை வேட்டையாட வைக்கும் நாட்டு வெடிகுண்டில் அடிபட்டு யானை முதல் கால்நடைகள் வரை உயிரிழந்து வரும் பரிதாபம் வேட்டை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இலுப்பநத்தம் என்னும் கிராமத்தில் ஞாயிறன்று காலை மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ஒன்று வேட்டைக்காரர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி அதன் தாடைப்பகுதி முழுவதும் சிதறி பலியானது. அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி நடராஜ் அதிகாலை தான் வளர்க்கும் மூன்று பசுமாடுகளை தனது விவசாய தோட்டத்தை ஒட்டியுள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்காக கூட்டி சென்றுள்ளார். பூமியில் வளர்ந்திருந்த புல் மற்றும் செடி கொடிகளை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்த திடீரென பெரும் வெடி சப்தத்து
டன் ஒரு பசுமாடு மட்டும் அதன் முகம் சிதறிய நிலையில் பலத்த காயங்களோடு கீழே சாய்ந்தது.

அதிர்ச்சியடைந்த நடராஜன் அருகில் சென்று பார்த்த போது காட்டுப்பன்றியை வேட்டையாட புதருக்குள் யாரோ வைத்த நாட்டு வெடிகுண்டை தனது மாடு மேய்ச்சலின் போது தெரியால் கடித்ததால் அது வெடித்துள்ளது வேட்டைக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடி என்பதால் இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.மூன்று மாத சினையுடன் உள்ள பசுமாடு கொடுமையான முறையில் இறந்துள்ளது என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி விவசாயிகள். வனத்தையொட்டியுள்ள பகுதிகளில் காட்டுப்பன்றியை வேட்டையாடும் கும்பல் இது போன்ற ஆபத்தான வெடிகுண்டுகளை மறைத்து வைக்கின்றனர். இதனை மனிதர்கள் அறியாமல் மிதித்தாலும் வெடித்து கால்களை இழக்க நேரிடும் என்கின்றனர். இதே போன்று மற்றொரு அதிர்ச்சிசம்பவம் கோவையில் உள்ள நரசிபுரம் பகுதியில் ஞாயிறன்று பன்றிக்கு வைத்த நாட்டு வெடிகுண்டில் சிக்கி ஒன்றரை வயது காட்டு குட்டி யானையொன்றும் பரிதாபமாக உயிர் இழந்துள்ளது என்ற தகவல் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், சற்று அழுத்தம் கொடுத்தாலும் பயங்கரமாக வெடித்து சிதறும் வகையில் இந்த நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்படுவதாகவும், வெடி மருந்தை உருட்டி அதனை சுற்றி சிறு, சிறு வெங்கிக்சான் கற்கள் என்னும் வெள்ளை நிறக்கற்களை போட்டு அதன் மீது மக்கா சோளமாவு அல்லது கோழி குடல், மாட்டு இறைச்சியின் கொழுப்பு போன்றவற்றை சுற்றி இந்த வெடிகுண்டு தயாரிக்க படுவதாகவும், இதன் வாசத்தின் காரணமாக காட்டுப்பன்றி இதனை கடித்தால் உடனடியாக தலை சிதறி இறந்து விடும் என தெரிவிக்கும் இவர்கள், காட்டுப்பன்றிக்கு இது போன்று வைக்கப்படும் அவுட்டுக்காய் என்றழைக்கபடும் இந்த நாட்டு வெடியில் சிக்கி கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு காட்டு யானைகள் பலத்த காயமடைந்து ஓரிரு தினங்களில் இறந்து போன சம்பவகளும் நடந்துள்ளன என்கின்றனர்.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதிகளில் இந்த வேட்டை கும்பல் அதிகளவில் நடமாடி வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பலத்த காயத்தோடு அடர்ந்த காட்டுக்குள் ஓடி உணவு உண்ண இயலாமல் இறப்பது கணக்கிலேயே வருவதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எப்போவாவது இந்த விபரீத வேட்டையில் ஈடுபடுவோரை பிடித்து வழக்கு போடுவது என்பதோடு இல்லாமல், தீவிர விசாரணை நடத்தி இது போன்ற வேட்டை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date