கோவையில் காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ..!
கோவை ரயில் நிலையம் அருகே காவல்துறை அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். காவல்துறை அருங்காட்சியகத்தில் நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் டாங்கிகள் வைக்கப்பட்டுளளன.கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கோவை ரயில் நிலையம் அருகே ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் காவலர் அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
தமிழக காவல்துறையின் வீரத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, தமிழக கடலோர காவல்படையினர் பயன்படுத்திய படகு, விடுதலை புலிகளிடம் கைப்பற்றபட்ட நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சிகத்தை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்க்காகவும் காவலர் அருங்காட்சியகம் உதவும் என்று கூறினார். கோவையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.