ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, கோவையில் அச்சிடப்பட்ட 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை, சாய்பாபா காலனி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருட்டு வாகனத்தில் பயணம் செய்த ஆனந்த் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது சட்டைப்பையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை பார்த்து, சோதனையிட்டதில் அவை கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஆனந்திடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டபோது, அவர் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், சாய்பாபா காலனி அடுத்த வேளண்டிபாளையம் பகுதியில், கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் இடத்திற்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர்.
அங்கு அச்சிடப்பட்ட நிலையில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பு என கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள கணிணி, பிரிண்டர் மற்றும் இதர பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து ஆனந்தை கைது செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவருடன் இணைந்து கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மற்ற குற்றவாளிகளை பிடிக்க, இரண்டு தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல கதை கருத்தியல் உள்ள திரைப்படங்களை விறுவிறுப்பாகவும் உயிரோட்டமாகவும் திரை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக…
சென்னை: பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு…
சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…